தென்னாடுடைய பெரியவா போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. நடமாடும் தெய்வமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி,அவர்களை நல்வழிப் படுத்திய மகான் மகா பெரியவா. நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து,அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி,துயரங்கள் மறந்து,உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர்.பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்;உடல் சிலிர்க்கும்.அப்படி சில பக்தர்களின் பரவச அனுபவங்கள் இவை